நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள்... வேகமா கைதட்டாதீங்கப்பா.. தூக்கம் கலையுதுல்ல..!

0 850

கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் நடந்த வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், நான் வளர்ந்துவிட்டேன் மம்மி என்ற விளம்பரம் போல் பா.ஜ.கவினர் சீன் காட்டுவதாக கூறினார்.

இக்கூட்டத்தில் பேசத்தொடங்கிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் வேட்பாளரின் பெயரை மாற்றிக்கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் முதுகுளத்தூரில் நடந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமர் காரசாரமாக பேசிய போது, மேடையில் அயர்ந்து தூங்கிய முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தொண்டர்களின் கைதட்டலால் கண்விழித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments