தமிழ்நாடு முழுவதும் சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் பிரச்சாரம்

0 146

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருச்சி, தா.பேட்டையில் அமைச்சர் நேரு பிரச்சாரம் மேற்கொண்டு பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளரான தனது மகன் அருண் நேருவுக்கு வாக்கு சேகரித்தார். 

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி மக்களுக்கு இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு சின்னம் பற்றி தெரியாது என்பதால் நாராயணசாமி வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார். 

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் உணவகத்தில் உணவருந்த சென்றபோது அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை அறிமுகப்படுத்தி பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சாதாரண தொண்டனுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு கலிய பெருமாளை வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக தெரிவித்தார். 

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். 

புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பது குறித்து நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், குக்கர் விசில் அடிக்கப்போவதில்லை, பம்பரம் சுற்றப்போவதில்லை, இரட்டை இலை மட்டும்தான் வெற்றி பெறும் என கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments