பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் இறங்கும் திருவிழா... தமிழக உள்துறை செயலாளர் அமுதா தீ மிதித்து நேர்த்திக்கடன்

0 417

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

அதிகாலை 3.50 மணிக்கு திருக்குண்டம் முன் சிறப்பு பூஜை செய்த பின், ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, இருபால் போலீசாரும், தீயணைப்புத்துறையை சேர்ந்த சிலரும் குண்டம் இறங்கினர்.

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

இன்று மாலை வரை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், ஈரோடு எஸ்.பி ஜவஹர் தலைமையில் 1400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பூக்குழி அருகே, தீயணைப்புத்துறையினரும் மருத்துவ பணியாளர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments