காங். ஊடகப் பொறுப்பாளர் சுப்ரியா பதிவால் கடுப்பான கங்கணா ரணாவத்

0 481

பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை கங்கணா ரணாவத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளரான சுப்ரியா ஷ்ரிநாடே அவதூறான விமர்சனம் செய்தது குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கும் இது தொடர்பாக புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கங்கணாவை ஒரு ஆபாச நடிகை என்று சாடிய சுப்ரியாவின் பதிவுக்கு பதிலளித்த கங்கணா தாம் ஒரு நடிகை என்ற முறையில் அனைத்துவகையான பெண்களின் பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளதாகக் கூறினார்.

தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்ததை குறிப்பிட்டுள்ள கங்கணா, எந்த வகையான பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் மரியாதைக்குரியவளாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது இன்ஸ்டா பக்கம் பலரால் பயன்படுத்தப்படுவதாகவும் தமது பெயரில் கங்கணாவை இழிவுபடுத்திய பதிவை தாம் போடவில்லை என்றும் சுப்ரியா விளக்கம் அளித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments