அதிமுக கூட்டணி கொள்கை கூட்டணி கொள்ளைக் கூட்டணி அல்ல: ராஜேந்திர பாலாஜி
அதிமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இது குறித்து கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும் போது,அதிமுக தலைமையில் தற்போது அமைந்துள்ள கூட்டணியானது கொள்கை கூட்டணி எனவும் இது கொள்ளையடிக்கும் கூட்டணி அல்ல எனவும் பேசினார்.
Comments