அண்ணா... நான் வேணா வெளியே நின்னுக்கிறேன்... தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியின் பரந்தமனசு

0 593

மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்த சாரதி வேட்புமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்கள் 3 பேருடன் வந்த நிலையில் கூட்டணிகட்சியான அதிமுக சார்பில் பாலகங்கா, தமிழ்மகன் உசான், ஆதிராஜாராம் உள்ளிட்ட 4 பேர் வந்திருந்தனர்.

5 பேர் தான் உள்ளே செல்லமுடியும் என்பதால் உள்ளே செல்ல போகின்ற 5 பேர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. “நான் வேணா வெளியே நின்னுக்கிறேன் அண்ணா நீங்கள் போய் எனக்காக மனுதாக்கல் செய்துவிட்டு வாருங்கள்”... என்று வேட்பாளர் பார்த்தசாரதி பெருந்தன்மையாக தெரிவித்தார்

வேட்பாளருடன் கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் செல்லட்டும் என்று முடிவெடுத்து 5 பேர் மட்டும் உள்ளே சென்றார்கள். மனு தாக்கல் செய்து விட்டு திரும்பிய பார்த்தசாரதி ஆரம்பமே அமர்க்களம் தான் என்று உற்சாகமாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments