தெலங்கானாவில் எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்
தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின்போது எதிர்க்கட்சியினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் புலனாய்வுப் புரிவு தலைவர் டி.பிரபாகர் ராவ் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள இவரது வீடு, தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனர் உரிமையாளர் ஷ்ராவன் ராவ் வீடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் இருந்து கருவிகளை வரவழைத்து ஒட்டுக்கேட்க உதவியதாக ஷ்ராவன் ராவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபாகர் ராவ் உள்ளிட்ட சிலருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments