நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது கூச்சல், குழப்பம்

0 285

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது சில இடங்களில் கூச்சல், குழப்பம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட நேரம் வழங்கிவிட்டு தாமதப்படுத்தியதாகக் கூறி கூச்சலிட்டு கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. 

கள்ளக்குறிச்சியில் தி.மு.க வேட்பாளர் மலையரசனும், அ.தி.மு.க வேட்பாளர் குமரகுருவும்  ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அதிமுக வேட்பாளருக்கு அதிக கூட்டம் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

கிருஷ்ணகிரியில் பா.ஜ.க சார்பில் நரசிம்மன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பனின் மகள் வித்யாராணி ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட  இரு கட்சி தொண்டர்களும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மாற்று வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது விதியை மீறி கூடுதலான நபர்களை அனுமதித்தற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதா எச்சரிக்கை விடுத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments