ஐ.நா. பார்லி. யூனியன் கூட்டத்தில் பயங்கரவாத 'தொழிற்சாலை'களை பாக். மூட வேண்டும்: இந்தியா

0 311

பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது.

கூட்டத்தில் இந்தியா சார்பில் பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பாகிஸ்தான் போன்ற மிக மோசமான ஜனநாயக வரலாற்றைக் கொண்ட நாடு, மற்றவர்களுக்கு பிரசங்கம் செய்வது நகைப்புக்குரியது என்றார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவை பல நாடுகள் தங்கள் ரோல் மாடலாக கருதுவதாக குறிப்பிட்ட சிங், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டுவது, அடைக்கலம் தருவது, ஆதரவளிப்பது, வளர்ப்பது நன்கு நிரூபிக்கப்பட்ட வரலாறு என்றும் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments