போர்வாள் என்றால் முனை கூர்மையாக இருக்க வேண்டுமாம்... நீங்கள் போட்டியிடுங்கள் நாங்கள் பிரசாரம் செய்கிறோம்: துரைவைகோ

0 564

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென திமுக மாவட்ட செயலாளர் கருத்தை வழிமொழிவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ், துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் ஏன் போட்டியிட வேண்டும் என்பதை விளக்கினார்.

இதற்கு பதிலளித்து கண்கலங்கியபடி பேசிய துரை வைகோ, செத்தாலும் தங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம், எங்களை புண்படுத்தி பேசாதீர்கள், வேண்டாமென்றால் 40 தொகுதிகளிலும் நாங்கள் பிரசாரம் செய்து உங்களுக்கு உழைக்க தயார் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments