கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம்

0 376

மதுபான கொள்கை முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் டெல்லியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

டெல்லி அமைச்சர் அதிஷி தலைமையில் திரண்ட ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள், மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனிடையே, கெஜ்ரிவாலை கண்டித்து பாஜக தொண்டர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாந்தினி சவுக்கில், திரண்ட பாஜக தொண்டர்கள், ஊழலில் ஈடுபட்ட கெஜ்ரிவால், முதலமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் என்று முழக்கமிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments