'நம்ம ரிமோட், நம்ம டிவி' - விமர்சனத்திற்கு விளக்கமளித்த கமல்ஹாசன்..!!

0 496

தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை வீசி டி.வியை உடைத்துவிட்டு தற்போது அந்த கட்சியுடனே கூட்டணியா? என பலர் தம்மிடம் கேட்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபின் பேசிய அவர் திமுக உடன் கூட்டணி வைத்தது குறித்து விளக்கம் அளித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் நடவடிக்கை குறித்து நிறைய பேர் வருத்தப்பட்டதாக கூறிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் நம்மில் ஒருவரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று கமல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments