291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பாஜக

0 471

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான கட்சியின் தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் கட்சியின் தலைவர் ஜே.பி நட்டாவும் கலந்துக் கொண்டனர்.உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதுவரை 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை 4 கட்டமாக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கான பாஜக வேட்பாளர்கள் மற்றும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி தலைவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments