வேட்பாளர்களிடம் 6 கேள்விகளை கேட்டு போர்டு மாட்டி வைத்த மருத்துவர்

0 549

கரூரில் தமது வீட்டை ஒட்டி கிளினிக் நடத்தி வரும் மோகன் என்ற மருத்துவர், வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் 6 கேள்விகளை கேட்டு தனது வீட்டு வாசலில் போர்டாக மாட்டி வைத்துள்ளார்.

நீங்கள் நேர்மையானவரா, நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை தருவீர்களா, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவரா, வாக்குகளை விலை பேசாவதரா, மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் செயல் திட்டம் உள்ளவரா, மக்கள் எளிதாக அணுகக் கூடியவரா என்ற கேள்விகளை கேட்டு, ஆம் என்றால் வாக்கு கேட்டு வருக என அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments