முன்னாள் தளபதியை எதிர்கொள்கிறாரா டிடிவி தினகரன்.. விஸ்வரூபம் எடுப்பாரா... பெட்டி பாம்பாக அடங்குவாரா ?

0 875

ஒரு காலத்தில் தேனியில் டிடிவி தினகரனின் பெருமைமிக்க தளபதியாக வலம் வந்தவர் தங்கதமிழ்ச்செல்வன். 4 வருடங்களுக்கு முன்பு டிடிவி தினகரனுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்த தங்கதமிழ் செல்வன், தான் விஸ்வரூபம் எடுப்பேன் என்று எச்சரித்தார்

தன்னிடம் விஸ்வரூமமெல்லாம் எடுக்க மாட்டார் , தன்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிவிடுவார் என்று பதிலுக்கு டிடிவி தினகரனும் பஞ்ச அடித்தார்

 

இதன் தொடர்ச்சியாக அமமுகவின் கொ.ப.செ பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ் செல்வன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பாரதீய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறாராமே என்று தங்க தமிழ்செல்வனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு , தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்றே தெரியாது என்று கிண்டலாக பதில் அளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments