தொப்பியில் இருந்த முடியால் அடையாளம் காணப்பட்ட குண்டு வைத்த ‘மர்ம நபர்’..! சென்னையில் ஒரு மாதம் தங்கியதாக தகவல்

0 958

பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் குண்டு வைத்ததாக தேடப்பட்ட தொப்பி அணிந்த நபர் யார் என்பதை மிக சாதுரியமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள நிலையில், கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட அந்த நபர் ஒரு மாதம் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி இருந்து இந்த சதிதிட்டத்தை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அங்கு பையில் வெடிகுண்டை வைத்துச்சென்ற தொப்பி அணிந்த நபரை என்.ஐ.ஏ அதிகாரிகள் தேடி வந்தனர்

நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை சேகரித்த அதிகாரிகள் அந்த மர்ம நபர் தொப்பி அணிந்தபடி செல்லும் காட்சிகளையும் மற்றும் தொப்பி அணியாமல் பேருந்தில் ஏறி பயணிக்கும் காட்சிகளையும் கைப்பற்றினர். அவர் அணிந்திருந்த தொப்பியை அங்குள்ள மசூதி ஒன்றின் கழிவறையில் இருந்து கைப்பற்றிய அதிகாரிகள் அதில் இருந்த ஒற்றை முடியை , டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பினர்.

அதில் அந்த நபர் கர்நாடக மாநிலம் சிமோகாவை பூர்வீகமாக கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளரும் 4 ஆண்டுகளாக தேடப்படுபவருமான முஷாவீர் உசேன் சாஹிப் என்பதும் இந்த சம்பவத்தில் அவரது கூட்டாளியான அப்துல் மாத்ரன்டாஹா என்பவருக்கும் தொடர்பிருப்பதையும் கண்டறிந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொப்பியில் இருந்த முடியில் இருந்த டி.என்.ஏவும், முஷாவீர் உசேன் சாஹிப்பின் டி. என்.ஏவும் ஒன்றாக இருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பாக சுமார் ஒரு மாதகாலம் முஷாவீர் உசேன் சாஹிப் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் ஒன்றில் தங்கி இருந்ததாகவும், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் , அவர் கட் நாடகாவில் இருந்து தப்பித்து கேரளா சென்று அங்கிருந்து தமிழகத்துக்குள் நுழைந்து மீண்டும் சென்னை வந்து இங்கிருந்து ஆந்திராவின் நெல்லூருக்கு சென்று மாயமானதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னையில் தங்கி இருந்த காலத்தில் முஷாவீர் உசேன் சாஹிப் யார் யாரை சந்தித்தார்?என்பது தொடர்பாக என்.ஐ.ஆ அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments