புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இன்று பொறுப்பேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள ஜார்கன்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை விமான நிலையத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ஆளுநர் மாளிகை முன்பாக அளிக்கப்பட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார்.
தெலுங்கானா ஆளுநராக நேற்று பொறுப்பேற்ற நிலையில், இன்று மாலை புதுச்சேரி துணை ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
Comments