அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை.யை கட்சி நிர்வாகிகள் மத்தியில் வெளியிட்டார் இ.பி.எஸ்.

0 856

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

கட்சி நிர்வாகிகள் மத்தியில் வெளியிட்டார் இ.பி.எஸ்.

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை: அதிமுக

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்: அதிமுக

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வேண்டும்: அதிமுக

அதிமுக தேர்தல் அறிக்கையில் 133 வாக்குறுதிகள் இடம்பெற்றன

ஆளுநர் பதவியில் நியமனம் செய்யும்போது மாநில அரசின் கருத்துக்கேட்க நடவடிக்கை: அதிமுக

குற்றவழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்: அதிமுக

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு வலியுறுத்தப்படும்

மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

சென்னை மெட்ரோ ரயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வலியுறுத்தப்படும்

கிளாம்பாக்கத்தில் இருந்து ஒரகடம் வரை மெட்ரோ ரயில் இயக்க வலியுறுத்துவோம்

மத்திய அரசு அறிவித்த ஓசூர் விமான நிலையத்தை விரைந்து முடித்திட வலியுறுத்துவோம்

நாகை, திருவாரூர் உள்ளடங்கிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்

மத்திய அரசு அறிவித்த ஓசூர் விமான நிலையத்தை விரைந்து முடித்திட வலியுறுத்துவோம்

நாகை, திருவாரூர் உள்ளடங்கிய பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்

அப்பளம், குண்டு வத்தல், பரமத்தி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைக்க வலியுறுத்துவோம்

நீட் தேர்வுக்கு மாற்றுத்தேர்வு முறை கொண்டு வர வலியுறுத்தப்படும்

கோவையில் மத்திய அரசின் என்ஐடி கல்வி நிறுவனத்தை அமைக்க வலியுறுத்துவோம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை உட்படுத்த வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வலியுறுத்தப்படும்

தென் மாவட்டங்களின் நலன் கருதி மதுரையில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். அமைக்க வலியுறுத்தல்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments