பதிவு செய்த நிலப் பத்திரத்தை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இணை பத்திர பதிவாளர், புரோக்கர் கைது
சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரிடம் பதிவு செய்த நிலப் பத்திரத்தை வழங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக இணை பத்திர பதிவாளர் அமுல்ராஜ் மற்றும் புரோக்கர் தென்னரசு இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டும், இதேபோல் கோடீஸ்வரனிடம் வேறொரு இடத்தை பத்திரப் பதிவு செய்ய அமுல்ராஜ் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
Comments