கரூரில் பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த 3 கைது

0 921

கரூரில் பாலியல் தொழிலுக்கு ஒத்துழைக்க மறுத்த பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான அந்தப் பெண், தனது தாயுடன் ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் நடனமாடி வந்துள்ளார். 

கரூரைச் சேர்ந்த மதி என்பவரது குழுவில் இணைந்து சில மாதங்களாக நடனமாடி வந்த அப்பெண்ணை பாலியல் ரீதியாக இணங்கிச் செல்லுமாறு மதி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு இளம்பெண் மறுத்ததால், தனி அறையில் 3 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ஊருக்குச் சென்றிருந்த இளம்பெண்ணின் தாய், சக நடனக் கலைஞர்கள் அளித்த தகவலின் பேரில் வந்து போலீசார் உதவியுடன் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

மதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments