பிரதமரை ஆபாசமாக சித்தரித்தவருக்கு ஒரு லட்சம் டாலர் நஷ்ட ஈடு வழங்க கோரி வழக்கு....

0 658

தன்னை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டவர்களிடம் ஒரு லட்சம் டாலர் இழப்பீடு கேட்டு இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இத்தாலியின் முதல் பெண் பிரதமரான, 47 வயதாகும் மெலோனியின் வீடியோக்கள் 2022ஆம் ஆண்டில் அமெரிக்க ஆபாச இணைய தளங்களில் வெளியாகின.

வீடியோ பதிவிடப்பட்ட செல்ஃபோனை கண்டறிந்து 74 வயது தந்தை மற்றும் 40 வயது மகனிடம் இத்தாலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆண்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவுவதற்கு இந்த இழப்பீட்டை நன்கொடையாக அளிக்கவுள்ளதாக கூறியுள்ள மெலோனி, கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் அச்சமின்றி புகார் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments