பட்டியல் சமூகத்தினருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த விவகாரத்தில் 2 பேர் கைது

0 405

ராசிபுரம் அருகே பட்டியல் சமூகத்தினருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரை விடுதலை செய்யக்கோரி திருமலைப்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சலூன் கடை உரிமையாளர் முத்து, ஊர் கட்டுப்பாடு எனக் கூறி தமது இரு மகன்களுக்கும் முடி திருத்தம் செய்ய மறுப்பதாக அருண் பாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முத்துவை கைது செய்தனர். 

அவ்வாறு கட்டுப்பாடு விதித்ததாக கூறி, செல்வராசு, ராஜேஷ்குமார் ஆகிய 2 பேரை எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை விடுதலை செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments