ரூ.1.59 கோடி பணப்பரிவர்தனை முறைகேடு என கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
250 சீன நாட்டினரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு விசா வழங்கப்பட்டதாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சி.பி.ஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை, வேலைக்காக சீனர்களுக்கு விசா வழங்கியதற்காக பஞ்சாபைச் சேர்ந்த Talwandi Sabo power limited என்ற நிறுவனம் 50 லட்ச ரூபாயை கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனிடம் வழங்கியதை கண்டுபிடித்தது.
அதை அவர் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் அந்த தொகை காலப்போக்கில் ஒரு கோடியே 59 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.
Comments