எலான் மஸ்கின் 'நியுரோலிங்' நிறுவனம் வடிவமைத்த 'சிப்'... மூளைக்குள் பொருத்தப்பட்ட சிப் மூலம் கணினியை இயக்கிய இளைஞர்
எலான் மஸ்க்கின் நியுரோலிங் நிறுவனம் வடிவமைத்த சிப்பை மூளைக்குள் பொருத்திய முதல் நபர், தமது சிந்தனை மூலம் கணிணியில் செஸ் விளையாடிய வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணங்களை கணிணி மூலம் செயல்படுத்தும் வகையில், மூளைக்கும், கணிணிக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் சிப்பை நியுரோலிங் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு, டைவிங் சாகசத்தில் ஈடுபட்டபோது தண்டுவளத்தில் படுகாயமடைந்து 2 கைகளும், 2 கால்களும் செயலிழந்த நோலண்டு ஆர்பாவ் என்பவரின் மூளைக்குள் அண்மையில் இந்த சிப் பொருத்தப்பட்டது.
எவ்வித வயர்களும் இன்றி, சிப்பில் உள்ள புளூடூத் மூலம் இவரால் கணிணியை கட்டுப்படுத்த முடியும் என நியுரோலிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments