பெங்களூருவில் ஹோலி பண்டிகையின்போது ஹோட்டல்கள், ரெசார்ட்டுகளில் மழை நடனம், நீச்சல் குள பார்ட்டிகளுக்குக் கட்டுப்பாடு
பெங்களூருவில் ஹோலி பண்டிகையின்போது பெரிய ஹோட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுகளில் மழை நடனம், நீச்சல் குள பார்ட்டிகளுக்கு காவிரி மற்றும் போர்வெல் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
வீடுகளில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடவும், நிகழ்ச்சிகள் நடத்தவும் எந்தத் தடையும் இல்லை என்றும், ஆனால் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் இச்சமயத்தில் வர்த்தகரீதியில் பொழுதுபோக்குக்காக ஹோட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுகளில் தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்துவது நியாயம் இல்லை என்றும் குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார்.
இக்கட்டான சூழலை மேலும் சிக்கலாக்காமல் அனைவரும் ஒத்துழைக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments