தேர்தல் ஆணையர்கள் நியமனம் - அரசு விளக்கம்
கடந்த 73 ஆண்டுகளாக தேர்தல் ஆணையர்கள் அரசால் நியமனம் செய்யப்படும் மரபையும் பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையர்களை பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழு தேர்வு செய்வதற்கு எதிரான வழக்குகளில் மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நியமனக் குழுவினரால் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு தேர்தல் ஆணையர்களின் தகுதி குறித்து எந்த ஒரு மனுவும் கேள்வி எழுப்பவில்லை என்றும் அரசுத் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நியமனக் குழுவினர் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments