தேர்தல் நேரம்... பயமாக உள்ளது கமலஹாசன் வீடுதான் அடையாளம்..! ரஜினியின் பயத்துக்கு என்ன காரணம் ..?

0 991

தேர்தல் நேரம் என்பதால் மூச்சுவிடவே பயமாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சென்னை வடபழனியில் 250 படுக்கை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையை தொடங்கி வைத்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார், 25 வருடங்களாக எந்த விதமான வணிக நிறுவனங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில்லை, என்றும் இந்த கட்டிடத்தில் ரஜினிகாந்தும் பார்ட்னர் என பேசுவார்கள், என்பதால் கலந்து கொள்வதில்லை என்றார்

சம்சாரம் அது மின்சாரம் படத்திற்காக செட் போடாமல் வீடு கட்டிய , ராசியான இடத்தில் மருத்துவமனையை கட்டியுள்ளதால் வெற்றி பெறும் என்றார்

யாருக்கு ஒழுக்கம், இல்லையோ வாழ்க்கையில் முன்னேற முடியாது  என்று கூறிய ரஜினிகாந்த் முன்பு காவேரி மருத்துவமனையின் அடையாளம் கமலஹாசன் வீடாக இருந்தது என்றும் தற்போது அது மாறியுள்ளதாகவும் கூறினார்

தேர்தல் நேரம் என்பதால் மூச்சுவிடவே பயமாக உள்ளது என்றார் ரஜினி காந்த்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments