திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1324

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திமுகவில் புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வட சென்னை - கலாநிதி வீராசாமி

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

வேலூர் - கதிர்ஆனந்த்

தருமபுரி - ஆ.மணி

திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

ஆரணி - தரணி வேந்தன்

சேலம் - டி.எம்.செல்வகணபதி

கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்

ஈரோடு - பிரகாஷ்

நீலகிரி - ஆ.ராசா

பெரம்பலூர் - அருண்நேரு

தஞ்சாவூர் - முரசொலி

தேனி - தங்கதமிழ்ச்செல்வன்

தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி

தென்காசி - ராணிஸ்ரீகுமார்

கள்ளக்குறிச்சி - மலையரசன்

பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி

காஞ்சிபுரம் - செல்வம்

திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதில்லை; உழைப்பின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்படுகிறது - மு.க.ஸ்டாலின்

பாஜக 2ஆம் இடம் பெறும் என அவர்கள் கூறி வருகிறார்கள்; தேர்தல் முடிவின்போது அது தெரியவந்துவிடும் - மு.க.ஸ்டாலின்

நோட்டோவுடன் குறைவாக யார் ஓட்டு வாங்குகிறார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னர் தெரியவரும் - மு.க.ஸ்டாலின்

பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு, இண்டியா கூட்டணியில் உள்ளவர் தான் பிரதமர் வேட்பாளர் என பதில்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் தென்சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியனும் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரத்தில் செல்வம், அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன் வேட்பாளர்களாக களமிறங்கும் நிலையில், வேலூரில் கதிர் ஆனந்தும் தருமபுரியில் மணியும் திருவண்ணாமலையில் சி.என்.அண்ணாதுரையும் திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

ஆரணியில் தரணி வேந்தன், சேலத்தில் செல்வகணபதி, கோவையில் கணபதி ராஜ்குமார் ஆகியோரும் ஈரோட்டில் பிரகாஷ், நீலகிரியில் ஆ.ராசா, பெரம்பலூரில் அருண் நேருவும் களமிறங்கியுள்ளனர்.

தஞ்சையில் முரசொலியும் தேனியில் தங்க தமிழ்செல்வனும் தூத்துக்குடியில் கனிமொழியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி தொகுதியில் டாக்டர்.ராணிஸ்ரீகுமார், கள்ளக்குறிச்சியில் மலையரசன், பொள்ளாச்சியில் ஈஸ்வரசாமி ஆகியோரும் திமுக வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். 21 வேட்பாளர்களில் 11 பேருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் - 21 திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments