நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் குற்றப்பதிவுள்ள ரவுடிகள் வசிக்கும் பகுதிகளில் போலீசார் சோதனை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் குற்றப்பதிவுள்ள ரவுடிகள் வசிக்கும் பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊருக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட ரவுடிகள் யாராவது இருக்கிறார்களா எனவும், ரவுடிகளின் வீடுகளில் ஆயுதம், நாட்டுவெடிகுண்டு, கஞ்சா உள்ளிட்டவை ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.
இருபதுக்கும் மேற்பட்ட ரவுடிகளை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments