கனவா இருந்தாலும் நியாயம் வேணாமாடா..? பெண்களுக்கு ரயிலில் இலவச பயணமாம்..!

0 1151

அதிமுக போஸ்டரில் எம்.ஜி.ஆர் படம் சிறியதாக போட்டதாக கூறி 4 பேர் சேர்ந்து அகில இந்திய எம்.ஜி.ஆர் ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி 2 தொகுதிக்கு வேட்பாளர்களையும் அறிவித்த கூத்து சென்னையில் அரங்கேறி உள்ளது

ரிட்டயர்டு மின்வாரிய ஊழியரான ராசமாணிக்கம் என்பவர் தான் 2 எம்.ஜி.ஆர் படத்தை கொடியில் அச்சிட்டு புதிய கட்சி தொடங்கி இருக்கும் எம்.ஜி.ஆர் நேசர்

தங்களிடம் ஏற்கனவே 10 சதவீத வாக்கு இருப்பதாகவும் அதிமுகவின் இரு அணிகளிடம் இருந்தும் 40 சதவீதம் வந்தால் 50 சதவீத வாக்கு கிடைக்கும் என்று சிரிக்காமல் கூறிய அவர், தாங்கள் ஜெயித்தால் பெண்களுக்கு ரயிலில் இலவச பயணம் என்றும் நா.. கூசாமல் அள்ளிவிட்டார்

தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியிலும் , கேரளாவில் பாலக்காட்டிலும் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்து கலகலப்பூட்டினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments