அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி மாணவர் உயிரிழப்பு

0 534

அமெரிக்காவின் பாஸ்டன் நகரை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அபிஜீத் பருச்சுரு, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துவந்தார்.

அண்டை மாநிலமான கனெக்டிகட்டில் வசித்துவந்த அவரது பெற்றோர், மகனை தொடர்புகொள்ள முடியவில்லை என அளித்த புகாரின் பேரில், அபிஜீத்தின் செல்போன் சிக்னலை டிராக் செய்த போலீசார், அடர்ந்த வனப்பகுதியில் இருந்த கார் ஒன்றில் இருந்து அவரை சடலமாக மீட்டனர்.

தங்கள் மகனை யாரோ பல்கலைக்கழகத்தில் வைத்து கொலை செய்து உடலை வனப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளதாகப் பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments