’திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது..’ சேலம் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேச்சு..!

0 959

தமிழில் உரையை துவக்கிய பிரதமர்

பாரத அன்னை வாழ்க என தமிழில் பேசிய பிரதமர்

பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்துடன் உரையை தொடங்கினார் பிரதமர்

பாரத அன்னை வாழ்க என தமிழில் உரையை துவக்கினார் பிரதமர் மோடி

என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் என்று கூறி பேசத் துவக்கினார் பிரதமர்

சேலம் புண்ணிய பூமியில் உள்ள சேலம் கோட்டை மாரியம்மனை முதலில் வணங்குகிறேன்: பிரதமர்

தமிழகத்தில் எனக்கு கிடைத்து வரும் ஆதரவை நாடே ஆச்சரியத்துடன் பார்க்கிறது: பிரதமர்

ஏப்ரல் 19-ஆம் தேதி ஒவ்வொரு ஓட்டையும் தே.ஜ. கூட்டணிக்கு வழங்க தமிழகம் முடிவு செய்து விட்டது: பிரதமர்

இம்முறை நானூறுக்கும் மேல் என பிரதமர் மோடி முழக்கம்

பா.ஜ.க.வுக்கு பெருகும் ஆதரவு தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்து விட்டது: பிரதமர்

தி.மு.க.வின் தூக்கம் தொலைந்துவிட்டது: பிரதமர்

நவீன கட்டமைப்புக்கு, பாரதம் தன்னிறைவைப் பெற, விவசாயிகள் பலனடைய, மீனவர்கள் பாதுகாப்புக்கு 400-க்கும் மேல் பெற வேண்டும்: பிரதமர்

ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும்: பிரதமர்

400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டும்: பிரதமர்

தமிழ்நாட்டின் வளர்ச்சியே தே.ஜ. கூட்டணியின் இலக்கு: பிரதமர்

சேலத்துக்கு வரும் போது பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன: பிரதமர்

40 ஆண்டுகளுக்கு முன் மானசரோவர் யாத்ரை சென்ற போது சேலத்தைச் சேர்ந்த ரத்னவேல் என்ற இளைஞர் என்னுடன் வந்திருந்தார்: பிரதமர்

சேலம் ரத்னவேல் எனக்கு தமிழ் கற்றுத் தர முயற்சித்தார். அவர் இன்றைக்கு நம்முடன் இல்லை: பிரதமர்

சேலம் நினைவுகளை பகிர்ந்த பிரதமர்

சேலத்தின் பெருமைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார் ரத்னவேல். அதன் மூலம் சேலத்தின் மீது எனக்கு ஈர்ப்பு உருவானது: பிரதமர்

எமர்ஜென்சி காலத்தில் சிரமங்களை எதிர்கொண்ட, பல பள்ளிகளை சேலத்தில் திறந்த கே.என். லட்சுமணனின் நினைவு வருகிறது: பிரதமர்

சேலம் குறித்த நினைவுகளை பகிரும் போது உணர்ச்சி வயப்பட்டு நா தழுதழுத்தார் பிரதமர் மோடி

பழைய நினைவுகளால் நா தழுதழுத்த பிரதமர்

ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து பேசிய போது கண் கலங்கிய பிரதமர் மோடி

ஆடிட்டர் ரமேஷ் பற்றி கண் கலங்கி பேசிய பிரதமர்

ஆடிட்டர் ரமேஷ் பா.ஜ.கவுக்காக கடினமாக உழைத்தவர். அவரை சமூக விரோதிகள் கொன்று விட்டனர்: பிரதமர்

கட்சிக்காக உயிர் நீத்த ஆடிட்டர் ரமேஷின் நினைவுக்காக ஒரு நிமிட நேரம் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்து கூற வேண்டுகோள் விடுத்த பிரதமர்

இண்டியா கூட்டணியின் தீய எண்ணம் வெளிப்பட்டுவிட்டது

மும்பையில் இண்டியா கூட்டணியின் முதல் கூட்டத்திலேயே அவர்களின் திட்டம் வெளியே வந்து விட்டது: பிரதமர்

சக்தியை அழிக்க வேண்டும் என்பதே இண்டியா கூட்டணியின் திட்டம்: பிரதமர்

ஹிந்து மதத்தில் சக்தியை எப்படி வழிபடுகிறோம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை: பிரதமர்

கோட்டை மாரியம்மன் கோயிலின் முன்பாக ஓம் சக்தி என்று எழுதப்பட்டுள்ளது: பிரதமர்

தமிழ்நாட்டில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, குமரி சக்தி பீடம், சமயபுரம் மாரியம்மன் போன்ற சக்திகள் உள்ளன: பிரதமர்

சக்தியை அழிக்க நினைப்பவர்களை அந்த சக்தியே அழித்துவிடும்: பிரதமர்

சக்திகள் நிறைந்த பூமி தமிழகம்: பிரதமர்

சக்தியின் வடிவத்தை அழித்துவிடுவோம் என தி.மு.க - காங். கூட்டணியினர் கூறி வருகின்றனர்: பிரதமர்

இந்து தவிர வேறு மதங்களை இண்டியா கூட்டணியினர் அவமதிப்பதில்லை: பிரதமர்

இந்து தருமத்தை அழிப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது: பிரதமர்

புனித செங்கோலை நாடாளுமன்றத்தில் நிர்மாணிப்பதை எதிர்த்தனர் இண்டியா கூட்டணியினர்: பிரதமர்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு விநாடி கூட வீணாக்கமால் இந்து தருமத்தை அவமதிக்கும் இண்டியா கூட்டணி: பிரதமர்

இந்து தருமத்துக்கு எதிரான இண்டியா கூட்டணி

சைவ ஆதீன மடங்களின் ஆசி பெற்றதால் செங்கோலுக்கு இண்டியா கூட்டணியினர் எதிர்த்தனர்: பிரதமர்

சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு நிச்சயமாக அழிவு ஏற்படும்: பிரதமர்

தமது கவிதையில் சக்தி சொரூபமாக பாரத அன்னையை வழிபட்டவர் சுப்பிரமணிய பாரதியார்

பாரதியாரின் வழியில் நானும் சக்தி உபாசகன்: பிரதமர்

தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்: பிரதமர்

ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகளின் மூலம் சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு அழிவை தாருங்கள்: பிரதமர்

சக்தியை அழைக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்: பிரதமர்

எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்க இருக்கிறது

உங்களுடைய சேவகனான மோடி பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்: பிரதமர்

தமிழ்நாட்டில் 3.65 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கச் செய்துள்ளேன்: பிரதமர்

தமிழ்நாட்டில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்: பிரதமர்

இன்று பெண்கள் சக்தி மோடியின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறது: பிரதமர்

பெண்கள் சக்தியே மோடியின் பாதுகாப்பு

அடுத்த 5 ஆண்டுகளில் நலத் திட்டங்கள் இன்னும் வேகமாக பெண்களுக்கு வந்து சேரும்: பிரதமர்

முத்ரா திட்டத்தின் மூலம் அதிக பெண்கள் கடன் பெற்று பலன் அடைகின்றனர்: பிரதமர்

இண்டியா கூட்டணியினர் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு தமிழ்நாடே சாட்சி: பிரதமர்

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது தி.மு.க.வினர் எப்படி நடந்து கொண்டனர் என்பது உங்களுக்கே தெரியும்: பிரதமர்

நாடாளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு இண்டியா கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்: பிரதமர்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்து போயிருக்கின்றன: பிரதமர்

பெண்கள் சக்திக்கு எதிரானவர்களுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி பெண்கள் பாடம் புகட்ட வேண்டும்: பிரதமர்

தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும்: பிரதமர்

தி.மு.க. குடும்பம் 5-வது தலைமுறையாக தமிழ்நாட்டை அபகரித்துக் கொண்டிருக்கிறது: பிரதமர்

ஜெயலலிதாவை இழிவுபடுத்திய தி.மு.க.வினர்: பிரதமர்

தி.மு.க.வும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்: பிரதமர்

ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் குடும்ப ஆட்சியை நடத்துகின்றனர் தி.மு.க.வும் காங்கிரசும்: பிரதமர்

காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகே 5-ஜி தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது: பிரதமர்

தி.மு.க.வினர் 5-ஜி, அதாவது ஐந்தாவது தலைமுறையாக தமிழகத்தை கொள்ளையடிக்கின்றனர்: பிரதமர்

மத்திய அரசு வழங்கும் நிதியை தி.மு.க. அரசு வீணடிக்கிறது: பிரதமர்

தி.மு.க.வின் 5-ஜி: பிரதமர் விமர்சனம்

தேசிய அரசியலில் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்க வேண்டிய மூப்பனாரை காங்கிரஸ் குடும்ப அரசியல் வளர விடவில்லை: பிரதமர்

பெருந்தலைவர் காமராஜ் போன்ற தலைவர்களை வழங்கிய நாடு தமிழ்நாடு: பிரதமர்

மதிய உணவு போன்ற நலத் திட்டங்களை வழங்கிய காமராஜர் எனக்கு உத்வேகம் அளித்த தலைவர்: பிரதமர்

கொள்ளையடிப்பதிலேயே தி.மு.க. குறி: பிரதமர்

காமராஜரை நினைவு கூர்ந்த பிரதமர்

தே.ஜ. கூட்டணி பெருங்கனவுகளை கண்டு, பெரிய இலக்குகளை கொண்டுள்ளது: பிரதமர்

20-க்கும் அதிகமான எய்ம்ஸ் உள்ளன, ஏராளமான மருத்துவக் கல்லூரிகளை திறந்துள்ளோம்: பிரதமர்

 நவீன உட்கட்டமைப்பு மூலம் மிகப் பெரிய உயரங்களை எட்டி வருகிறோம்: பிரதமர்

பல ஆயிரம் கி.மீ. சாலைகளை உருவாக்கி உள்ளது பா.ஜ.க.: பிரதமர்

சுயசார்பு இந்தியாவை அடைவதில் பா.ஜ.க. முனைப்போடு இருக்கிறது: பிரதமர்

7 பெரிய ஜவுளி பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். தமிழகமும் அதில் பலனடையும்: பிரதமர்

வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை கொண்டு செல்வோம்

நாட்டில் 2 பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்கி வருகிறோம். அதில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது: பிரதமர்

சேலத்தின் உருக்கு தொழில் பலனடையும் வகையில் ரூ. 6000 கோடியில் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளோம்: பிரதமர்

தமிழகத்திற்கு பல கோடி மதிப்புள்ள திட்டங்கள்: பிரதமர்

சேலம் பகுதியில் ரயில்வே கட்டமைப்புக்கு ரூ. 260 கோடி செலவிடப்பட்டுள்ளது: பிரதமர்

புதிய உச்சத்துக்கு செல்ல இருக்கும் தமிழகம்: பிரதமர்

தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ள தலைவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்: பிரதமர்

வலிமையான பாரத்தை உருவாக்கும் சபதத்துடன் தலைவர்கள் நம்முடன் இணைந்துள்ளனர்: பிரதமர்

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தை புதிய உயரத்துக்கு நாங்கள் கொண்டு செல்வோம்: பிரதமர்

தமிழகம் புதிய உயரத்துக்கு செல்லும் என்பது எங்கள் அனைவரின் உத்தரவாதம்: பிரதமர்

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்: பிரதமர்

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ். அது இந்தியாவினுடையது: பிரதமர்

எந்த நாட்டில் உலகின் பழமையான மொழி இருக்கிறதோ அந்த நாடு பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளும்: பிரதமர்

என்னால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது: பிரதமர்

எக்ஸ் தளத்தில் நமோ இன் தமிழ் பக்கத்தை அனைவரும் பின் தொடர வேண்டும்: பிரதமர்

பாரத் மாதா கி ஜே என்று முழங்கி உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments