வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் முன்னிலையில் ஏவுகணை மற்றும் ராக்கெட் ஏவுகலங்கள் சோதனை

0 224

வடகொரியாவின் மேற்குப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு ஏவுகணை மற்றும் ராக்கெட் ஏவுகலங்களின் சோதனைப் பயிற்சியை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார்.

இது தொடர்பான புகைப்படங்களை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ளது. போருக்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில், முப்படைகளை நவீனப்படுத்தவும், போதுமான ஆயுதங்களைத் தயார் நிலையில் வைக்கவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், பல நாடுகளின் எச்சரிக்கையையும், எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் அடிக்கடி சோதனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments