உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் : நடிகர் சூர்யா
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என நடிகர் சூர்யா தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித பாடங்களின் ஆராய்ச்சி படிப்புகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய சூர்யா, ஏராளமான கண்டுபிடிப்புகளில் பெண்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருந்தும் ஆண்கள் மட்டுமே பாராட்டு பெறுவதாக கூறினார்.
Comments