கூலித்தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை... பெண் தோழியை குடும்பத்துடன் கைது செய்த போலீசார்

0 421

உத்தமபாளையத்தில் கூலி தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது பெண் தோழியை குடும்பத்துடன் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த கூலித் தொழிலாளியான உத்தமபாளையத்தைச் சேர்ந்த கணேசன், தமது சொந்த ஊரைச் சேர்ந்த ஜமுனா என்பவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை உத்தமபாளையம் புதிய வாட்டாட்சியர் அலுவலகம் அருகே கணேசன் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

விசாரணை நடத்திய போலீசார், கடந்த வாரம் குடும்பத்துடன் உத்தமபாளையத்துக்கு சென்ற கணேசன், தமது மனைவியை சென்னைக்கு அனுப்பிவிட்டு இரவில் ஜமுனா வீட்டிற்கு சென்ற போது அவருக்கும், ஜமுனாவின் கணவர் சுரேஷுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதில், சுரேஷ் கயிற்றால் கழுத்தை நெரித்து கணேசனை கொலை செய்ததாவும் தெரிவித்தனர்.

பின்னர் சுரேஷ், ஜமுனா, ஜமுனாவின் தாய், தந்தை ஆகிய 4 பேரும் சேர்ந்து கணேசனின் சடலத்தை சாலையோரம் வீசிவிட்டு சென்றதாக கூறி அவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments