தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனை... உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல்

0 508

கரூர் மற்றும் லாலாபேட்டை, மருதூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாகன சோதனைகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 9 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பிடிபட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த சோழதரம் காவல் நிலையம் அருகே காரில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உரிய ஆவணங்களில் இன்றி சிறிய ரக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments