ஹோலிப்பண்டிகையை வரவேற்க லட்டுப் பிரசாதம் வீசும் விழாவில் பக்தர்கள் முண்டியடித்ததால் நெரிசலில் சிக்கி 20 பக்தர்கள் காயம்
ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மதுரா நகரில் லட்டு வீசும் திருவிழா நடைபெற்றது. அப்போது பெரும் கூட்டமாக கூடிய பக்தர்களால் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நேற்று முதல் 10 நாட்களுக்கு ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு லட்டு வீசும் விழா தொடங்கியது. கூரைகளின் மேல் இருந்து அர்ச்சகர்கள் வீசும் லட்டுப் பிரசாதத்தைப் பெற பக்தர்கள் முண்டியடிப்பது வழக்கம். நேற்று இவ்விழாவின் போது பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து காலடியில் நசுங்கினர்.
போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Comments