ஃபாரஸ்ட் டேல் பகுதியில் ஆறாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ

0 276

குன்னூர் அருகே உள்ள ஃபாரஸ்ட் டேல் பகுதியில் ஆறாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 20 ஹெக்டேர் பரப்பளவிலான பலவகை மரங்கள் எரிந்துள்ளன.

கடந்த 4 நாட்களாக 150 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் இணைந்து முயன்றும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் நேற்று சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து  ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.

இந்தநிலையில் 2 ஆவது நாளாக ரேலியா அணையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments