நிறுத்தாமல் சென்ற டாட்டா ஏஸ் லோடு வாகனம், தேர்தல் பறக்கும் படையினர் சுமார் 1கிமீ துரத்தி சென்று பிடித்ததால் பரபரப்பு.
சென்னை பீச் ஸ்டேஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் நிற்காமல் சென்ற டாட்டா ஏஸ் லோடு வாகனத்தை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்.
துறைமுகத்திலிருந்து சவுகார்பேட்டைக்கு சென்ற அந்த லோடு வாகனம் முழுவதும் குழந்தைகள் விளையாடும் பொம்மை பொருட்கள் இருந்துள்ளது. இன்சூரன்ஸ் இல்லாததால் நிற்காமல் சென்றதாக ஓட்டுனர் விசாரணையில் தெரிவித்ததையடுத்து அவரை எச்சரித்து அனுப்பினர்.
Comments