புதின் பரிசளித்த லிமோசின் சொகுசு காரில் வலம் வந்தார் கிம் ஜாங் உன்
ரஷ்யா வடகொரியா இடையேயான நட்பை, உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறும் வகையில், அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பரிசாக தந்த லிமோசின் சொகுசு காரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முதன்முறையாக பொது இடங்களில் வலம் வந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதினை கிம் சந்தித்துப் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான நட்பு அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் ராணுவ உறவுகளை மேம்படுத்தவும் உறுதியளித்துள்ளன.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஏவுகணைகளையும் பீரங்கி குண்டுகளையும் தயாரித்து அளித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவரும் குற்றச்சாட்டை வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன. இதற்கிடையே, வடகொரிய ராணுவத்தினரின் போர் ஒத்திகை நிகழ்ச்சிகளை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
Comments