வெளி மணிப்பூர் தொகுதிக்கு மட்டும் 2 கட்டத் தேர்தல்... ஏப்.19 மற்றும் ஏப்.26 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு

0 288

மக்களவைக்கான தேர்தலில் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் 7 கட்டத் தேர்தலை அறிவித்த போது மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு பதிலாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 544 என கணக்கு வந்தது.

இதை சுட்டிக்காட்டி செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த ராஜீவ்குமார், பாதுகாப்பு காரணம் கருதி அவுட்டர் மணிப்பூர் தொகுதி மட்டும் இரண்டாக பிரிக்கப்பட்டு முதல் பகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதியும், மற்ற பகுதிகளுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படுவதாக விளக்கமளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments