தலைவன் தொண்டையில குண்டு.. விஜய் ரசிகர்களால் ரூட் கிளியர் ராகுலை எதிர்க்கும் கம்யூனிஸ்டு ராஜூபாயின் பாலிடிக்ஸ் பஞ்ச்..!

0 383

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மானமுள்ள காங்கிரஸ்காரர்கள் யாரும் , ராகுல் காந்தியை எதிர்க்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஓட்டு போடமாட்டார்கள் என்று தெரிவித்தார்

குண்டயே தொண்டையில் வைத்து வாழ்ந்த தலைவனின் பரம்பரையப்பா நாங்கள்... என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சிறுபான்மை மக்கள் தங்களுக்கு வாக்களிக்க தயாராகி விட்டதாக தெரிவித்தார்

2026 தேர்தலில் விஜய் களத்துக்கு வரும் போது திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைக்கும்
நிலை உருவாகும் என்று விஜய் ரசிகர்கள் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு சின்னபிள்ளைக.. என்று கலாய்த்த செல்லூர் ராஜூ அவர்களால் தங்கள் ரூட் கிளியர் என்றார்

மதுரையில் கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு காங்கிரசார் ஓட்டு போட மாட்டாங்க என்ற செல்லூர் ராஜூ, கேரளாவில் போட்டியிடும் ராகுலை, கம்யூனிஸ்ட் எதிர்ப்பதாகவும் , இந்தியாவை சுடுகாடாக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் கூறுவதாகவும் விமர்சித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments