மாபெரும் ஜனநாயக திருவிழா தொடங்கி விட்டது... அரசின் செயல்பாடு அடிப்படையில் மக்களை சந்திப்போம்: பிரதமர் மோடி

0 227

நல்லாட்சி மற்றும் பல்வேறு துறைகளில் செய்த சாதனைகளின் அடிப்படையில் மக்களை சந்திக்கப் போவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமது சமூக வலைப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தலுக்கு பா.ஜ.க. மற்றும் என்.டி.ஏ. முழு அளவில் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு அடுத்த 5 ஆண்டுகள் அடித்தளமிட உள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆசிகள் மூலம் தமக்கு பலம் கிடைப்பதாகவும், நான் மோடியின் குடும்பம் என்று அவர்கள் சொல்வதை கேட்கும் போது வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டமைக்க கடினமாக உழைப்பதற்கான உத்வேகம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments