ரஷ்ய அதிபர் புடின் பரிசளித்த ரூ.8.2 கோடி மதிப்புள்ள காரில் பயணித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரிய ராணுவத்தின் போர் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் அண்மையில் தமக்கு பரிசளித்த காரில் வந்ததன் மூலம் இரு நாடுகளின் வடகொரியாவின் நெருங்கிய நட்பு வெளிப்படுவதாக கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பரில் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்துப் பேசி, இருநாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும் என்று அறிவித்தனர்.
அந்த பயணத்தின்போது கிம் ஜாங் உன்னுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 8 கோடியே 20 லட்சம் விலையுள்ள ரஷ்யன் ஆரஸ் லிமுசைன் காரை புடின் பரிசளித்திருந்தார்.
Comments