தேனியில் ஒரு நாளுக்கு 5 முறை மூடப்படும் ரயில் கிராசிங்கால் சிரமப்படும் வாகன ஓட்டிகள்
தேனி அரண்மனை புதூர் ரயில்வே கேட் நாள்தோறும் 5 முறை மூடப்படுவதால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டே முடிவடைய வேண்டிய மேம்பால பணிகள் மெதுவாக நடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாகவும் விரைந்து பணியை முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Comments