2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

0 3041

முதற்கட்ட தேர்தலில் விளவங்கோடு இடைத்தேர்தல்

7 கட்டங்களாக மக்களவை தேர்தல்

முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல்

2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்

விளவங்கோடு உட்பட 13 மாநிலங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும்

மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும்

தமிழ்நாட்டில் வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி முடிவடைகிறது

தமிழ்நாட்டில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசிநாள் மார்ச் 30ஆம் தேதி ஆகும்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு


1ஆம் கட்ட மக்களவை தேர்தல் : ஏப்.19ஆம் தேதி

2ஆம் கட்ட மக்களவை தேர்தல் : ஏப்.26ஆம் தேதி

3ஆம் கட்ட மக்களவை தேர்தல் : மே.7ஆம் தேதி

4ஆம் கட்ட மக்களவை தேர்தல் : மே 13ஆம் தேதி

5ஆம் கட்ட மக்களவை தேர்தல் : மே 20ஆம் தேதி

6ஆம் கட்ட மக்களவை தேர்தல் : மே 25ஆம் தேதி

7ஆம் கட்ட மக்களவை தேர்தல் : ஜூன் 1ஆம் தேதி

வரும் புதன்கிழமை வேட்புமனு தொடக்கம்

தமிழ்நாட்டில் வரும் புதன்கிழமை மக்களவை தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

இன்றிலிருந்து 34 நாள்களில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் இன்றிலிருந்து 34 நாட்களில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

ஏப்.19ல் 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்

ஏப்.19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல்

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, டெல்லி, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்.19ல் தேர்தல்

இமாச்சல், ஹரியானா, மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்.19ல் தேர்தல்

வாக்கு எண்ணிக்கைக்கு 46 நாட்கள் காத்திருப்பு.!

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து 46 நாட்களுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

 முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல்

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உட்பட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், 102 மக்களவை தொகுதிகளில் ஏப்.19ல் வாக்குப்பதிவு

 

 மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடத்த தயார் - தலைமை தேர்தல் ஆணையர்

2024ஆம் ஆண்டு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே தேர்தல் ஆண்டாக உள்ளது - தலைமை தேர்தல் ஆணையர்

உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்ற உதாரணமாக இந்திய தேர்தல் அமைந்திருக்கிறது - ராஜீவ்குமார்

17ஆவது மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் 16ஆம் தேதி நிறைவடைகிறது - தலைமை தேர்தல் ஆணையர்

2024 மக்களவை தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் - தலைமை தேர்தல் ஆணையர்

96.88 கோடி வாக்காளர்களில் 49.70 கோடி ஆண் வாக்காளர்கள்; 47.10 கோடி பெண் வாக்காளர்கள்

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 1.82 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

1.50 கோடி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் - தலைமை தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன - தலைமை தேர்தல் ஆணையர்

800 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசித்து மக்களவை தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது - ராஜீவ்குமார்

கடந்த 2 ஆண்டுகளில் 11 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை நடத்தியுள்ளோம் - தலைமை தேர்தல் ஆணையர்

55 லட்சத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன - தலைமை தேர்தல் ஆணையர்

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், கழிவறை, சாய்வுதளம், உதவி மையம், வீல்சேர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்

2024 மக்களவை தேர்தலில் 88.40 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

விரும்பினால், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40% சதவிகிதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்

ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியாவோர் மக்களவை தேர்தலில் வாக்களிக்கலாம் - தலைமை தேர்தல் ஆணையர்

தேர்தல் முறைகேடுகள் குறித்து சி.விஜில் செயலி மூலம் புகார் அளித்தால், 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை - ராஜீவ்குமார்

KYC App மூலம் வேட்பாளர்கள் முழு விபரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் - தலைமை தேர்தல் ஆணையர்

குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் குறித்த தகவல்களை நாளிதழ்களில் வெளியிட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராஜீவ்குமார்

எல்லை பகுதிகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்; போதிய அளவில் மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்பு

1.பணபலம், 2.ஆள்பலம், 3.வதந்திகள், 4.தேர்தல் விதிமீறல்கள் ஆகியவை தேர்தல் ஆணையம் முன் உள்ள 4 சவால்கள் - ராஜீவ்குமார்

மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் காட்ட கூடாது - தலைமை தேர்தல் ஆணையர்

 வங்கி வாகனங்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது - ராஜீவ்குமார்

பணப்பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை கண்காணிக்கும்

"சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை பாயும்"

சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை பாயும் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

"பணப்பட்டுவாடா, பரிசு, மது விநியோகம் கண்காணிக்கப்படும்"

"ஓட்டுக்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை பாயும்"

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள், மது விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும்

"விமர்சிக்கலாம், போலி செய்தி கூடாது"

"விமர்சிக்கலாம், போலி செய்தி கூடாது"

வேட்பாளர் குறித்து அரசியல் கட்சிகள் விமர்சிக்கலாம்; போலி செய்திகளை பதிவிடக் கூடாது; கண்ணியம் காக்க வேண்டும்

சாதி, மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையில் விமர்சித்தோ, பரப்புரையில் ஈடுபட கூடாது - தேர்தல் ஆணையம்

"நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியம் காத்திடுக"

 அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியமான முறையில் பரப்புரையில் ஈடுபட வேண்டும்

"தேர்தல் பரப்புரையில் சிறார்களை பயன்படுத்தாதீர்"

தேர்தல் பிரச்சாரங்களில் சிறார்கள் பயன்படுத்த கூடாது; மீறினால் நடவடிக்கை பாயும்

"சிவப்புக் கோட்டை தாண்ட வேண்டாம்"

தேர்தல் பரப்புரையிலும் தேர்தல் தொடர்பான செய்திகளிலும் சிவப்புக் கோட்டை தாண்ட வேண்டாம் என வலியுறுத்தல்

"மதுபான ஆலைகள் கண்காணிக்கப்படும்"

மதுபான ஆலைகளில் உற்பத்தி மற்றும் விற்பனை அளவு கண்காணிக்கப்படும்

2100 தேர்தல் பார்வையாளர் நியமனம்

நாடு முழுவதும் தேர்தலை கண்காணிக்க 2100 தேர்தல் பார்வையாளர் நியமனம்

"சாதி, மத ரீதியாக பிரச்சாரம் செய்யக்கூடாது"

வெறுப்புப் பேச்சு, சாதி மதம், தனிநபர் வாழ்க்கைகளை விமர்சிக்கும் பேச்சுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்

போட்டியாளர்களை அவமதிக்கும் வகையில் சமூக ஊடக பதிவுகளை மேற்கொள்ளக் கூடாது

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments