"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கன்னியாகுமரியில் மருத்துவக் கழிவுடன் கேரள வாகனம் சிறைபிடிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பழைய பாலம் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போவை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்துவருகின்றனர். குமரியில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு உணவுக் கழிவுகள் சப்ளை செய்வதாகக் கூறி கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் எடுத்துவரப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதனை சாவடியில் போலீசார் ஒழுங்காக பரிசோதனை செய்யாததால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது
Comments