'ஸ்கூட்டி பெப்' வாகனங்களைக் குறிவைத்து திருடிய நபர் கைது... 60 வயது முதியவர் கைது

0 316

தமக்கு ஸ்கூட்டி பெப் மட்டுமே ஓட்டத் தெரியும் என்பதால் அவற்றை மட்டுமே குறி வைத்து திருடிய 60 வயது நபரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

சூப்பர் மார்கெட் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது ஸ்கூட்டி பெப் திருடுபோனதாக பெண் ஒருவர் புகார் அளித்தார்.

அதே பாணி திருட்டு வழக்கில் தொடர்புடைய ஹரிகிருஷ்ணன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, தமக்கு ஸ்கூட்டி பெப் மட்டுமே ஓட்டத் தெரியும் என்பதால், அவற்றை மட்டுமே திருடி, பக்கத்து மாவட்டங்களுக்கு ஓட்டிச் சென்று 6000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விற்றுவந்ததாக ஒப்புக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments