சி.ஏ.ஏ குறித்த அமெரிக்காவின் கருத்துகள் தேவையற்றவை, தவறானவை - வெளியுறவு அமைச்சகம்
இந்தியக் குடியுரிமைச் சட்டம் அமல் குறித்து தேவையற்ற தவறான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
சிஏஏ அமலாக்கம் குறித்து கண்காணித்து வருவதாகவும், அனைத்து மதத்தவர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சிஏஏ சட்டம் குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்தான் தவிர பறிப்பதற்கான சட்டம் அல்ல எனக் குறிப்பிட்டார்.குடியுரிமை இல்லாதவர்களின் மனித உரிமைகளை மதிக்கும் சட்டம் இது என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்
Comments