மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், 140 கோடி மக்களுக்கு திறந்த மடல் எழுதிய பிரதமர் மோடி

0 677

மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், 140 கோடி இந்தியர்களுக்கு திறந்த மடல் ஒன்றை பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

தமது அரசின் சாதனைகளையும், நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் விளக்கியுள்ள அவர், இந்தியாவை பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக்க தமக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி சட்டம் அமல், 370 சட்டப்பிரிவு ரத்து ஆகியவற்றின் பின்னணியையும் அவர் விளக்கியுள்ளார்.இந்திய பொதுமக்கள்தான் தமது குடும்பம் என்று தெரிவித்த மோடி கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள், விவசாயிகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை தமது அரசு உயர்த்தி இருப்பதாகவும், இப்பணி அடுத்த ஆட்சியிலும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments